முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் நியமனம்? மேலிடப் பொறுப்பாளர் சென்னை வருகை

சனிக்கிழமை, 11 ஜனவரி 2025      அரசியல்
BJP-2025-01-11

சென்னை, தமிழக பா.ஜ.க.வில் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்காக வரும் 17 ஆம் தேதி மேலிடப் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பா.ஜ.க. தேசிய தலைமை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை உள்கட்சி தேர்தலை நடத்தி, அதற்கேற்ப மாநிலத் தலைவர்கள் மற்றும் கட்சி கவுன்சில் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக பா.ஜ.க. தலைமை பொறுப்பாளர்களை நியமிக்கும். இந்த நிலையில், தமிழகத்திற்கு இன்னும் ஒன்றைரை ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பதவிக்காலம் முடிவடைய உள்ளதை அடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி வரும் 17 ஆம் தேதி சென்னை வருகிறார். சென்னையில் இரண்டு நாள்கள் தங்கும் கிஷன் ரெட்டி, கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அடுத்த மாநிலத் தலைவர் தொடர்பான அறிக்கையை கட்சி தலைமையிடம் அளிப்பார் என்றும் அதற்கு பின்னர் தமிழக பா.ஜ.க. தலைவரை பா.ஜ.க. தேசிய தலைமை அறிவிக்கும் என கூறப்படுகிறது. 

பா.ஜ.க. மாநிலத் தலைவர் பெயர்ப் பட்டியலில் அண்ணாமலை, வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் நயினார் நாகேந்திரன் பெயர்கள் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து