எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம வணங்கான். V House Productions சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
கன்னியகுமாரியில் தனது தங்கையுடன் வாழ்ந்து வரும் கதாநாயகன் அருண் விஜய் வாய் பேச இயலாதவராக இருக்கிறார்.தங்கை மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் அருண் விஜய், தன் கண்முன் கொடுமைகள் நடந்தால் அதை தட்டிக் கேட்கும் நபராகவும் மாறிவிடுகிறார். இந்நிலையில் அருண் விஜய்க்கு ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் செக்யூரிடி வேலை கிடைக்கிறது.
ஒரு கட்டத்தில் அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள இரண்டு நபர்களை அருண் விஜய் கொலை செய்கிறார். இந்த கொலைகளை செய்தது நான் தான் என, தானே முன் வந்து போலீசிடம் சரணடைகிறார். போலீஸ் எவ்வளவு கேட்டாலும் கொலைக்கான காரணத்தையும் சொல்லாமல் மூடி மறைக்கிறார் எதற்காக இந்த கொலையை செய்தார்? ஏன் மறைகிறார் என்பதே படத்தின் மீதி கதை.
அருண் விஜய் வாய் பேச இயலாதவராக நடித்து நம்மை கலங்க வைத்துவிட்டார். எமோஷனல் காட்சிகளில் இவருடைய நடிப்பு மனதை தொடுகிறது. அதே போல் ரோஷ்ணி பிரகாஷ், ரிதா ஆகியோரின் நடிப்பும் பாராட்டுக்குரியது.கௌரவ வேடத்தில் தோன்றும் மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனியின் கதாபாத்திரங்களும் சிறப்பு. சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை சுட்டிக்காட்டி, அதற்கு தண்டை இப்படித்தான் இருக்க வேண்டும் என திரைக்கதையை நேர்த்தியாக கொண்டு சென்ற விதம் சிறப்பாக இருந்தது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் பாடல்கள் சிறப்பு. சாம் சி.எஸ். பின்னணி இசை மிரட்டல். மொத்தத்தில் வணங்கான் கலங்க வைத்து விட்டான். அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


