முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத கஜ ராஜா விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2025      சினிமா
Mada-Gaja-Raja-Review 2025-

Source: provided

திருமணம் ஒன்றில் தனது சிறு வயது பள்ளி நண்பர்களை சந்தித்து பேசிக்கொண்டு இருக்கும் போது, அவர்கள் அனைவரும் ஒருவனால் பெரும் பிரச்சனையில் சிக்கியிருப்பது தெரிய வருகிறது.

இதற்கு காரணம் ஒரு தொழிலதிபர்தான் என்பதும் தெரிய வருகிறது. அவரிடம் சமாதானமாக பேசி நண்பர்களின் பிரச்சனைகளை தீர்க்கும் முயற்சியில் விஷால் ஈடுபடுகிறார். ஆனால், விஷாலை தொழிலதிபர் உதாசினப்படுத்த பின்னர் பிரச்சனை எப்படி உருவெடுக்கிறது, அந்த தொழிபதிபர் நிலமை என்னவாயிற்று.. என்பதை சொல்லும் படந்தான் மத கஜ ராஜா’.

12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம் என்பதால் விஷால் இளமையாக இருக்கிறார். நாயகிகளாக நடித்திருக்கும் அஞ்சலி மற்றும் வரலட்சுமி சரத்குமார் இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். வில்லனாக நடித்திருக்கும் சூனு சூட், வழக்கமான பணக்கார வில்லன் வேடத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார்.

மனோபாலா, சுவாமிநாதன் ஆகியோருடன் சந்தானம் கூட்டணி காமெடி காட்சிகள் சரவெடியாக வெடிக்கிறது. விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் அனைத்தும் கமர்ஷியலாகவும், மக்களை குஷிப்படுத்தும் விதத்திலும் அமைந்திருக்கிறது. மொத்தத்தில், மத கஜ ராஜா பழசானலும் புதுசுதான். பார்க்கலாம்  ரசிக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து