முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் ரூ.2,700 கோடியில் கட்டப்பட்டுள்ள சோனாமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 13 ஜனவரி 2025      இந்தியா
modi

Source: provided

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தில் உள்ள காகங்கீர் மற்றும் சோனாமார்க்கை இணைக்கும் வகையில் 'இசட்' வடிவ சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் மற்றும் சோனாமார்க் இடையே லே வரை செல்லும் ரூ.2,700 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 6.5 கிமீ நீளமுள்ள சோனாமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். இந்த விழாவில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கடுமையான பருவநிலைகளை பொருட்படுத்தாமல் சுரங்கப் பாதை கட்டுமானத்துக்கு அயராது பணியாற்றிய தொழிலாளர்களை சந்தித்து, பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் அவர்களை வெகுவாக பாராட்டினார். பிரதமரின் வருகையையொட்டி ஜம்மு காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இருவழிப் பாதையாக தலா 10 மீ., அகலம் கொண்ட சிக் - சாக் வளைவுகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த சுரங்கப் பாதையில், அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ., வேகத்தில், ஒரு மணி நேரத்திற்கு 1,000 வாகனங்கள் செல்ல முடியும். அவசர காலத்தில் உதவும் வகையில், இந்த சுரங்கப்பாதையின் அருகில் 10 மீ., அகலத்தில் மற்றொரு சுரங்கப் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

ரெயில்வே சுரங்கப்பாதையாகவும் இதை பயன்படுத்தும் அளவுக்கு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இமயமலை புவியியலைக் கருத்தில் கொண்டு, நியூ ஆஸ்ட்ரியன் சுரங்க முறையில், இந்த இசட் வடிவ சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் பனிச்சரிவு வழிகளை தவிர்த்து சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் - லே இடையே அனைத்து காலங்களிலும் போக்குவரத்து இணைப்பு துண்டிக்கப்படாமல் இருக்கும். ஸ்ரீநகர் - சோனாமார்க் இடையே அனைத்து வானிலைகளிலும் செல்லும் வகையில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து