முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

37 மாவட்டங்களில் சாலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

திங்கட்கிழமை, 13 ஜனவரி 2025      தமிழகம்
CM 2024-12-16

Source: provided

சென்னை : 37 மாவட்டங்களில் 746 சாலைகள் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஊரக மக்களுக்கு நேரடி தொடர்பு வசதியினை வழங்குவதில் சாலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. போக்குவரத்தில் ஊரகச் சாலைகள் கடைசி இணைப்பாக கருதப்பட்டாலும், ஊரக பகுதி மக்களுக்கு போக்குவரத்து வசதியினை வழங்குவதில் மிக முக்கிய இணைப்பாக ஊரகச் சாலைகள் செயல்படுகின்றன. தமிழ்நாடு, சுமார் 1 லட்சத்து 37 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்ட பரந்த சாலைத் தொகுப்பினை கொண்டுள்ளது. ஊரகச் சாலைத் தொகுப்பினை மேம்படுத்தி அதன் மூலம், மாநிலத்தில் உள்ள தொலைதூரப் பகுதிகளுக்கும் சாலை வசதியினை உறுதிப்படுத்தும் தொலைநோக்குப் பார்வையினை இந்த அரசு கொண்டுள்ளது.

இதனை உறுதி செய்யும் வகையில், ஊரகச் சாலைகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்த இந்த அரசு, நபார்டு- ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ் 2024-25-ம் ஆண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 37 மாவட்டங்களில் 1,452.97 கி.மீ நீளமுள்ள 746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடி மற்றும் அச்சாலைகளின் 5 ஆண்டு கால தொடர் பராமரிப்பு ரூ.58 கோடி மதிப்பீட்டில் அமைக்க தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி மதுரை மாவட்டத்தில் ரூ. 37.30 கோடி மதிப்பீட்டில், 57.58 கி.மீ நீளமுள்ள 30 சாலைகள், சிவகங்கை மாவட்டத்தில் ரூ. 35.30 கோடி மதிப்பீட்டில், 58.22 கி.மீ நீளமுள்ள 26 சாலைகள், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ரூ. 50.72 கோடி மதிப்பீட்டில், 91.88 கி.மீ நீளமுள்ள 39 சாலைகள், திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 60.08 கோடி மதிப்பீட்டில், 73.08 கி.மீ நீளமுள்ள 38 சாலைகள், விருதுநகர் மாவட்டத்தில் ரூ. 40.03 கோடி மதிப்பீட்டில், 74.39 கி.மீ நீளமுள்ள 39 சாலைகள், தென்காசி மாவட்டத்தில் ரூ. 15.58 கோடி மதிப்பீட்டில், 32 கி.மீ நீளமுள்ள 14 சாலைகள், தேனி மாவட்டத்தில் ரூ. 10.44 கோடி மதிப்பீட்டில், 20.20 கி.மீ நீளமுள்ள 12 சாலைகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ. 14.83 கோடி மதிப்பீட்டில், 29.57 கி.மீ நீளமுள்ள 17 சாலைகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.17.10 கோடி மதிப்பீட்டில், 23.93 கி.மீ நீளமுள்ள 8 சாலைகள், 20.57 கி.மீ நீளமுள்ள 14 சாலைகள் மற்றும் 37 மாவட்டங்களில் 1,452.97 கி.மீ நீளமுள்ள 746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடி மற்றும் அச்சாலைகளின் 5 ஆண்டு கால தொடர் பராமரிப்பு ரூ.58 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து