முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோசமான வானிலை - அடர் மூடுபனி: டெல்லியில் 100 விமானங்கள், 26 ரெயில் சேவைகள் தாமதம்

புதன்கிழமை, 15 ஜனவரி 2025      இந்தியா
Delhi 2024-11-17

டெல்லி, புது டெல்லியில் நேற்று காலை முதல் நிலவி வரும் மோசமான வானிலை மற்றும் அடர்த்தியான மூடுபனியால் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 26 ரெயில்கள் தாமத மாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நேற்று காலை 5.30 மணியளவில் டெல்லியின் சபார்டஞ் பகுதியின் குறைந்தபட்ச தெரிவுநிலை 200 மீட்டர்களாகவும், பாலம் பகுதியில் 150 மீட்டர்களாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

புது டெல்லியின் இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் விமான ஓடுபாதையின் தெரிவுநிலை 75 முதல் 300 மீட்டர்கள் அளவிலுள்ளதாகவும், இதனால் அங்கு இயக்கப்படும் விமானங் கள் சி.ஏ.டி. 3 எனும் கட்டுபாடுகளின் கீழ் இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளதாகவும், மீண்டும் விமானங்கள் இயக்கப்படும் நேரங்கள் குறித்து தெரிந்துக்கொள்ள பயணிகள் தங்களது விமான நிறுவனங்களைத் தொடர்புக் கொள்ளுமாறு அந்த விமானநிலைத்தின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்லி ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப் படவிருந்த 26 ரெயில்களும் அடர்த்தியான மூடுபனியால் தாமதமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனம் டெல்லிக்கு மூடுபனிக்காக ஆரஞ்சு அலார்ட் அறிவித்திருந்தது. மேலும், வாகன ஓட்டிகளும் பயணிகளும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து