முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. மகா கும்பமேளாவில் முட்கள் மீது படுத்து ஆசி வழங்கும் துறவி

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2025      இந்தியா
UP-2025-01-16

பிரயாக்ராஜ், உத்தர பிரதேச மகா கும்பமேளாவிற்கு வந்திருந்த துறவி ஒருவர், முட்கள் மீது படுத்து மக்களுக்கு ஆசி வழங்கி  வருகிறார்.   

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி இன்று தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரையிலான 45 நாட்கள் இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.

இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும் பெருமை மிக்க மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்க கூடும்.

புனித சங்கமத்திற்கு வருகை தருபவர்களுக்கு பல ஆச்சரிய விசயங்கள் நடந்து வருகின்றன. இவற்றில் காந்தே வாலே பாபா என்ற துறவி அனைவரையும் கவர்ந்துள்ளார். இவர் முட்கள் பரப்பிய பகுதிக்கு, மேலாடை எதுவும் அணியாமல் செல்கிறார். கையில் சிறிய குச்சியுடன், இடுப்பில் சின்ன ஆடையும், தலையில் காவி நிற துண்டும் அணிந்தபடி, பரப்பியிருந்த முட்கள் மீது சாய்ந்து படுத்து கொள்கிறார். இதனை பார்த்து சுற்றியிருந்தவர்கள் ஆச்சரியமடைந்தனர்.

இதுபற்றி அவர் கூறும்போது, நான் குருவுக்கு பணிவிடை செய்கிறேன். குரு எனக்கு அறிவும், முழு பலமும் அளித்துள்ளார். இது எல்லாம் கடவுளின் மகிமை. அதுவே நான் இதனை செய்ய உதவுகிறது என்று முட்களின் மீது படுத்தது பற்றி கூறுகிறார்.

நான் கடந்த 40 முதல் 50 ஆண்டுகளாகவே, இதனை செய்து வருகிறேன். ஒவ்வோர் ஆண்டும் முட்கள் மீது படுத்து வரும் செயலை செய்து வருகிறேன். ஏனென்றால், இது என்னுடைய உடலுக்கு பலனளிக்கிறது. அது ஒருபோதும் என்னை துன்புறுத்தியதில்லை என்றும் அவர் கூறுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து