முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட மக்களுக்கு அனுமதி: பார்வையாளர் கட்டண விவரம் வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 23 டிசம்பர் 2025      தமிழகம்
TN 2023-04-06

நெல்லை, பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட பொதுமக்கள் அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து கட்டணம் தொடர்பான அறிவிப்பு வெளியடப்பட்டுள்ளது. மேலு ம் நெல்லை ரெயில் நிலையம், நெல்லை பஸ்டாண்ட் பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

பொருநை அருங்காட்சியகத்தை நேற்று முதல் மக்கள் கண்டு ரசிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்தது. இதனையொட்டி கல்லூரி மாணவர்களும், உள்ளூர் மக்கள் என்று பலர் பொருநை அருங்காட்சியகத்தை ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர். காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொருநை அருங்காட்சியகத்தை மக்கள் பார்வையிடலாம்.

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட சிறியவர்களுக்கு ரூ.10, மாணவர்களுக்கு ரூ.5 கட்டணம்,  பெரியவர்களுக்கு கட்டணமான ரூ. 20 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டினருக்கு ரூ.50 நுழைவுச்சீட்டு கட்டணமாக வசூலிக்கப்படும். செவ்வாய் கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் பொருநை அருங்காட்சியத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தின் 5D, 7D தியேட்டருக்கு ரூ.25 தனி கட்டணம். பொருநை அருங்காட்சியகத்தை மக்கள் பார்வையிட வசதியாக நெல்லை ரெயில் நிலையம், நெல்லை பஸ்டாண்ட் பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து