முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வை வெற்றிப்பாதையில் அழைத்து செல்வோம்: இ.பி.எஸ்.

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2025      தமிழகம்
eps

சென்னை, நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம் என்று தொண்டர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கட்சித் தொண்டர்களுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

 "வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்" என்ற கேள்வியை மக்கள் முன் எழுப்பினால், "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்", "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்." என்று தான் பதில் வரும். அந்த அளவிற்கு  தன்னிகரற்ற மனிதாபிமானம் கொண்ட மனிதராக, திரைத் துறையில் பன்முகத் தன்மை கொண்ட ஆளுமையாக, அரசு நிர்வாகத்தில் ஆட்சி செய்யும் நல்இதயம் படைத்த தீரமும், வீரமும் கொண்டு நிர்வாக ஆற்றல் படைத்த தலைவராக, சரித்திர நாயகராக வாழ்வாங்கு வாழ்ந்தவர்.

எம்.ஜி.ஆருடைய ஆட்சிக்குப் பின்னர்தான், அரசாங்கங்கள் ஒரு சாதாரண தனி மனிதனை முன்வைத்து திட்டங்களைத் தீட்ட ஆரம்பித்தன.   எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்திலும், ஜெயலலிதாவின் நல்லாசியோடு செயல்பட்ட எனது தலைமையிலான ஆட்சியிலும், மக்கள் நலன் சார்ந்து நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஏராளம். 

தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியை, குடும்ப ஆட்சியை விரட்டவும், எம்.ஜி.ஆரின், ஜெயலலிதாவின் பேரியக்கத்தை ஆட்சிப் பீடத்தில் மீண்டும் அமர்த்தவும், தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஜனநாயகத்தை சீர்குலைக்க, நம் அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்குகின்ற கடமையும், பொறுப்பும், நம் அனைவர் முன்பும் இருக்கின்றது.  நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம்; வெற்றிவாகை சூடுவோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து