எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெய்ஜிங், புத்தர் வடிவிலான டொனால்டு டிரம்ப் சிலைகள் ஆன்லைனில் ரூ.2.30 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டன.
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப்பின் உருவத்தை புத்தர் போல உருவாக்கியுள்ளார் சீனாவைச் சேர்ந்த பீங்கான் உருவ வடிவமைப்பாளரும் சிற்பியுமான ஹாங் ஜின்ஷி. வருகிற 20-ம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில், புத்தர் வடிவிலான டிரம்ப் சிலைகள் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.
சீனக் கைவினைக் கலைஞர் ஹாங் ஜின்ஷியின் சிலைகள், 140 டாலர்கள் முதல் 2,700 டாலர்கள் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. கலை மற்றும் அரசியலை இணைக்கும் இந்த பீங்கான் சிலைகள், உலகெங்கிலும் உள்ள சிலை சேகரிப்பாளர்களிடம் அதிக ஆர்வத்தை ஈர்த்துள்ளன. 999 முதல் 20 ஆயிரம் யுவான்களுக்கு அதாவது இந்திய மதிப்பு படி சுமார் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.2.30 லட்சம் வரை அவற்றின் அளவைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்துள்ளார் ஹாங் ஜின்ஷி. இந்த சிலைகள் சீன இணையதளத்தில் விற்பனைக்கு உள்ளது.
இதுகுறித்து ஹாங் ஜின்ஷி கூறுகையில்:-
தேர்தலில் அவர் வெற்றி பெற்ற பின்னாள்களில் நிறைய ஆர்வம் இருந்தது. முதலில் சிலைகளை நகைச்சுவைக்காக வடிவமைத்தேன். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான பீங்கான் சிலைகளை உருவாக்கியுள்ளேன். டிரம்பின் செயல் முறையும் புத்தர் சிலையின் வடிவமும் இரண்டு எதிரெதிர் வடிவங்கள் என்பதால் வாடிக்கையாளர்கள் புன்னகையுடன் வாங்கிச் செல்கின்றனர் என தெரிவித்துள்ளார். .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |