முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் கார் பந்தயம்: தமிழக அரசுக்கு அஜித்குமார் பாராட்டு

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2025      சினிமா
Ajith-kumar-2025-1-15

Source: provided

சென்னை : சென்னை கார் பந்தயம் நடத்திய தமிழக அரசுக்கு நடிகர் அஜித்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், சென்னையில் முதல்முறையாக ஸ்ட்ரீட் ரேசிங் நடைபெற்றது. அதுவும் இரவுநேர போட்டியாக நடந்தது. இதனை சாத்தியப்படுத்திய முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி. இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அது இருந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மோட்டார் ஸ்போர்ட்ஸ்க்கு நிறைய நல்ல விஷயங்களை செய்து வருகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

துபாயில் அண்மையில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தய போட்டியில் நடிகர் அஜித்குமார் தன்னுடைய அணியினருடன் பங்கேற்றார். அதில் ஒரு பிரிவில் அஜித் குமாரின் அணி மூன்றாவது இடம் பிடித்து சாதனைப் படைத்தது. இதைத்தொடர்ந்து அஜித் குமருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்தன. பின்னர் அவர், தனது கார் பந்தயப் போட்டிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து