எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஜெருசலேம் : இன்று முதல் 3 கட்டங்களாக இஸ்ரேலிய பிணை கைதிகள் 33 பேருக்கு பதில் 1,904 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்படுவுள்ளனர்.
இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்கு மேல் நீடித்து வந்த நிலையில் இரு தரப்பும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. அதன்படி இஸ்ரேல் , ஹமாஸ் இடையே இன்று காலை 8.30 மணி முதல் (இஸ்ரேல் நேரப்படி) போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது. இந்த போர் நிறுத்தம் 3 கட்டங்களாக அமல்படுத்தப்படுகிறது.
முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் 33 இஸ்ரேலிய பணய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட பாலஸ்தீனியர்கள் 1,904 பேரை விடுதலை செய்ய இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.
பணய கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் என்ன? போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் பகுதி 6 வாரங்களை (42 நாட்கள்) கொண்டது. இன்று(ஞாயிற்றுகிழமை) காலை 8.30 மணி முதல் (இஸ்ரேல் நேரப்படி) போர் நிறுத்தம் அமலுக்கு வரும். போர் நிறுத்தப்படி ஹமாஸ் ஆயுதக்குழு தங்கள் வசம் உள்ள பணய கைதிகளில் 33 பேரை 42 நாட்களுக்குள் விடுதலை செய்யும். போர் நிறுத்தம் அமலுக்கு வரும் முதல் நாளான இன்று(ஞாயிற்று கிழமை) பணய கைதிகளில் 3 பெண்களை ஹமாஸ் விடுதலை செய்யும்.
எஞ்சிய 30 பணய கைதிகள் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் 6 வாரங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் விடுதலை செய்யப்படுவர். * இஸ்ரேலிய பணய கைதிகள் 33 பேர் 4 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பெண்கள், குழந்தைகள், முதியோர், காயமடைந்தோர் என வகைப்படுத்தப்பட்டு ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
உயிருடன் உள்ள பணய கைதிகளில் ஒவ்வொரு பெண், குழந்தை, முதியோருக்கு ஈடாக தலா 30 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்யும். (எடுத்துக்காட்டாக பணய கைதியாக உள்ள இஸ்ரேலிய குழந்தையை ஹமாஸ் விடுதலை செய்யும்போது அந்த குழந்தைக்கு ஈடாக 30 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுதலை செய்யும். அதேபோல், ஒரு பெண் பணய கைதிக்கு ஈடாக 30 பாலஸ்தீனர்களும், ஒரு முதிய பணய கைதிக்கு ஈடாக 30 பாலஸ்தீனர்களும் விடுதலை செய்யப்படுவர்).
காயமடைந்து, நோய்வாய்ப்பட்டுள்ள 9 பணய கைதிகளுக்கு ஈடாக 110 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவர். பணய கைதியாக உள்ள ஒவ்வொரு இஸ்ரேலிய பாதுகாப்புப்படை வீராங்கனைகனைக்கு ஈடாக 50 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவர். ஹமாஸ் ஆயுதக்குழுவால் கடத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் காசாவில் சிக்கியுள்ள இஸ்ரேலியர்களான அவிரா மென்கிடு மற்றும் ஹசிம் அல் சயது ஆகியோருக்கு ஈடாக தலா 30 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவர். மேலும், 2011ம் ஆண்டு பணய கைதிகள் ஒப்பந்தபடி விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்ட பாலஸ்தீனியர்கள் 47 பேர் விடுதலை செய்யப்படுவர்.
போர் நிறுத்தத்தின் முதல்பகுதியில் (6 வாரங்கள்) காசா முனையில் உள்ள பணய கைதிகளில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள 1000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்படுவர். போர் நிறுத்தத்தின் முதல் பகுதியில் 33 பணய கைதிகள் விடுதலை செய்யப்படும் பட்சத்தில் ஹமாஸ் வசம் உள்ள பணய கைதிகளின் எண்ணிக்கை 65 ஆக இருக்கும். எஞ்சிய பணய கைதிகள் போர் நிறுத்தத்தின் 2ம் பகுதியில் பரிமாற்றம் செய்யப்படுவர்.
ஒட்டுமொத்தமாக போர் நிறுத்தத்தின் முதல் பகுதியில் ஹமாஸ் ஆயுதக்குழு பணய கைதிகளில் 33 பேரை விடுதலை செய்கிறது. 33 பேருக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களில் 1,904 பேரை விடுதலை செய்கிறது. இஸ்ரேல் விடுதலை செய்யும் பாலஸ்தீனியர்களில் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்களை சேர்ந்தவர்களும் அடக்கம். இதில் பலர் பயங்கரவாத செயல்கள், துப்பாக்கி சூடு தாக்குதல்கள், குண்டுவெடிப்பு தாக்குதல், கத்திக்குத்து தாக்குதல், இஸ்ரேலியர்களை கொலை செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களும் அடக்கம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
சட்டப்பேரையில் 2026-2027-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
16 Feb 2026சென்னை, சட்டசபையில் 2026-2027-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
-
எம்.என்.ராஜம்- எஸ்.பி.முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
16 Feb 2026சென்னை, தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி
-
தமிழ்நாட்டில் 8,400 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.5,980 கோடி முதலீட்டிற்கான 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
16 Feb 2026சென்னை, தமிழகத்தில் 8,400 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.5,980 கோடி முதலீட்டிற்கான 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்
-
நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பிப். 21ல் கனமழை பெய்ய வாய்ப்பு
16 Feb 2026சென்னை, தமிழகத்தில் வரும் பிப்.
-
இருப்பது உண்மைதான்: வேற்றுக்கிரகவாசிகள் குறித்து பராக் ஒபாமா பரபரப்பு தகவல்
16 Feb 2026நியூயார்க், வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது உண்மைதான் என்று அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமா தெரிவித்துள்ளாா்.
-
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ., 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம்
16 Feb 2026புதுடெல்லி, நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ., 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
-
ரூ.542.02 கோடி செலவில் கல்விசார் கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Feb 2026சென்னை, ரூ.542.02 கோடி செலவில் பல்வேறு கல்விசார் கட்டிடங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மனோகர்
16 Feb 2026சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் தென்காசி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மனோகர் இணைந்தார்.
-
தங்கம் விலை சற்று சரிவு
16 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஆந்திரா அரசுக்கு பில்கேட்ஸ் பாராட்டு
16 Feb 2026அமராவதி, விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஆந்திரா அரசுக்கு பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
கேரளாவில் உறுப்பு தானம் மூலம் 5 பேரை வாழவைத்த 10 மாத பெண் குழந்தைக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
16 Feb 2026திருவனந்தபுரம், சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாதக் குழந்தை தனது உறுப்புகள் மூலம் 5 பேரை காப்பாற்றிய 10 மாதக் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இ
-
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் த.வெ.க.வுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு
16 Feb 2026புதுச்சேரி, தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
சபரிமலையில் பெண்கள் வழிபடும் விவகாரம்: சீராய்வு மனுக்கள் மீது ஏப.7 முதல் விசாரணை: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உத்தரவு
16 Feb 2026புதுடெல்லி, சபரிமலையில் பெண்கள் வழிபடும் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்கள் மீது 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வருகின்ற ஏப்ரல் 7 ஆம் த
-
பொறியியல் கல்லூரி மாணவர்கள் 1,657 பேருக்கு மடிக்கணினிகள் அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்
16 Feb 2026சென்னை, பொறியியல் கல்லூரி மாணவர்கள் 1,657 பேருக்கு மடிக்கணினிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
-
சூடானில் துணை ராணுவம் தாக்குதல்: பொதுமக்களில் 6 ஆயிரம் பேர் பலியானதாக ஐ.நா. குற்றச்சாட்டு
16 Feb 2026கார்டும், துணை ராணுவப் படையினர் நடத்திய கோரத் தாக்குதலில் ஒரே வாரத் தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை
-
ஜனநாயகத்துக்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: இந்திய தேர்தல் ஆணையம் நூதன முறையில் பிரச்சாரம்
16 Feb 2026டெல்லி, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், நூதன பிரச்சாரத்தையும் மேற்கொண்டுள்ளது.
-
ஏ.ஐ. உச்சி மாநாட்டை நடத்த இந்தியா மிக சரியான இடம்: ஐ.நா. பொதுச்செயலாளர் பாராட்டு
16 Feb 2026நியூயார்க், உலகின் மிகவும் வெற்றிகரமான வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ள இந்தியா செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை நடத்துவதற்கு சரியான இடம் என்று ஐ.நா.சபை பொதுச்செயலாள
-
தமிழ்நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொசுக்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
16 Feb 2026சென்னை, தமிழ்நாடு முழுவதும் கொசுக்களை ஒழிக்க மருந்தடிக்கவும், கொசு ஒழிப்புப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று வீடுகளில் தண்ணீர் தேங்கி உள்ளதா என்று ஆய்வு செய்யவும், காய்
-
புது டெல்லியில் ஏ.ஐ. உச்சி மாநாடு தொடக்கம்: ஏ.ஐ. வளர்ச்சியில் இந்தியா முன்னணியில் உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
16 Feb 2026புது டெல்லி, புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா ஏ.ஐ. உச்சி மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். மேலும், ஏ.ஐ.
-
இன்றைய நாள் எப்படி?
16 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Feb 2026- ஶ்ரீசைலம், திருவைகாவூர், திருக்கோகர்ணம், காளஹஸ்தி கோவில்களில் சிவபெருமானுக்கு திருக்கல்யாணம்.
- நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் லட்ச தீபம்.


