முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறப்பாக செயல்படுகிறது: தேர்தல் ஆணையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2025      இந்தியா
modi 2025-01-04

Source: provided

புதுடில்லி : சிறப்பாக செயல்படுவதாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

2025-ஆம் ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. அதில் பிரதமர் நரேந்திர மோடி  தமது உரையில், தேர்தல் ஆணையம் மக்கள் சக்தியை வலுப்படுத்த தொழில்நுட்ப ஆற்றலைப் பயன்படுத்தி வருவதாகவும், நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதற்கான தம் பங்களிப்பையும் வெளிக்காட்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜன. 25-ம் தேதி தேர்தல் ஆணைய நிறுவன நாளாகும். அன்றைய நாளானது, ‘தேசிய வாக்காளர்கள் நாளாகக்’ கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் சிறப்பாகச் செயல்படுவதாகப் பிரதமர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். மேலும், மகா கும்ப மேளா தொடங்கிவிட்டதாகவும், இவ்விழாவானது ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கருத்தை கொண்டாடுவதாய் அமைந்துள்ளதாகவும் சிலாகித்து பேசினார். “ஏழையோ செல்வந்தனோ, இச்சங்கம நிகழ்ச்சியில் அனைவரும் சமமே. தெற்கிலிருந்து வடக்கு வரை மக்களை ஒன்றிணைக்கிறது மகா கும்ப மேளா. இதில் இளையோர் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கின்றனர். அந்த விதத்தில், கலாசாரத்துடன் இளையோர் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும்போது, தேசத்தை அது வலிமையாக்குகிறது’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து