முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேவாகிற்கு கங்குலி புகழாரம்

ஞாயிற்றுக்கிழமை, 2 பெப்ரவரி 2025      விளையாட்டு
Ganguly 2023-08-26

Source: provided

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் விரேந்தர் சேவாக். இவர் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்று இருந்தவர். அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முறை முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார். இந்திய அணிக்கு பெரும் பங்களித்த அவர், 2015-ம் ஆண்டோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார். இருப்பினும் போட்டியின் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடும் இவரது பேட்டிங் ஸ்டைல் இன்றளவும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலியிடம், சுனில் கவாஸ்கருக்கு அடுத்து இந்திய அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டது.  அதற்கு பதிலளித்த கங்குலி, "என்னை பொறுத்தவரை சுனில் கவாஸ்கருக்கு அடுத்து இந்திய அணி கண்டெடுத்த மிகச்சிறந்த தொடக்க வீரர் வீரேந்திர சேவாக்தான்" என்று பதிலளித்தார்.

________________________________________________________________________________________

ரவி சாஸ்திரி, பாண்டிங் கணிப்பு

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. 

அந்த வரிசையில் முன்னாள் வீரர்களான ரவி சாஸ்திரி (இந்தியா) மற்றும் ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) இருவரும் இணைந்து சமீபத்திய ஐ.சி.சி. நிகழ்வு ஒன்றில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் குறித்து தங்களது கணிப்பினை வெளியிட்டுள்ளனர். அவர்களது கணிப்பின் படி, இறுதிப்போட்டியில் 'இந்தியா - ஆஸ்திரேலியா' மோதும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் தகுதி பெறும் என்று கூறியுள்ளனர்.

________________________________________________________________________________________

பாக்.முன்னாள் வீரர் விமர்சனம்

9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் வரும் 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகளை அனைத்து கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து விட்டன. அதில் கடைசியாக பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. முகமது ரிஸ்வான் தலைமையிலான அந்த அணியில் பாபர் அசாம், ஹரிஸ் ரவுப், ஷாகீன் அப்ரிடி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இந்த அணியில் பஹீம் அஷ்ரப், குஷ்தில் ஷா சேர்க்கப்பட்டுள்ளது அந்நாட்டின் முன்னாள் வீரர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பாகிஸ்தான் அணி தேர்வு சரியில்லை என்று அந்நாட்டின் முன்னாள் ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இந்த அணியில் பஹீம் அஷ்ரப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், ஆனால் கடந்த சில மாதங்களாக அவரது பேட்டிங் சராசரி 8 ஆகவும், பந்துவீச்சு சராசரி 100 ஆகவும் உள்ளது. இது தவிர, குஷ்தில் ஷாவின் செயல்திறனும் சிறப்பாக இல்லை. நாங்கள் ஒரு சுழற்பந்து வீச்சாளரை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளோம், ஆனால் இந்தியா 4 சுழற்பந்து வீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. அந்த வகையில் எங்களது அணி தேர்வு சரியில்லை" என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து