முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாக சைதன்யா, சாய் பல்லவி இணையும் தண்டேல்

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2025      சினிமா
Thandel 2025-02-03

Source: provided

உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் தண்டேல். இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரிக்க, நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் சந்து மொண்டேட்டி இயக்கியிருக்கிறார்.அல்லு அரவிந்த் வழங்கும் இப்படம் பிப்ரவரி 7 ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், ‘தண்டேல்’ படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில், நடிகர் கார்த்தி, வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். விழாவில், நாக சைதன்யா பேசுகையில், இந்த படத்துக்காக என்னை நான் மாற்றிக் கொண்டேன்.‌ ஸ்ரீகாக்குளம் மீனவர்கள் தான் இப்படத்தின் உண்மையான நாயகர்கள். ஒவ்வொரு லவ் ஸ்டோரி திரைப்படத்திலும் பாடல்கள் ஹிட்டாக  அமைய வேண்டும். இதிலும் ராக் ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் எல்லா பாடல்களையும் ஹிட்டாக்கி இருக்கிறார். பிப்ரவரி 7ல் தண்டேல் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் பார்த்து ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து