முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் காயம்: வங்கதேச தொடரில் இடம்பெறுவாரா?

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2025      விளையாட்டு
Sanju-Samson

Source: provided

மும்பை : இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா என கேள்வி எழுந்துள்ளது.

அபார வெற்றி.. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்றுடன் (பிப்ரவரி 2) நிறைவடைந்தது. நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் இந்திய அணி, 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

சஞ்சு சாம்சன் காயம்...

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடிய சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியின்போது, வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து சஞ்சு சாம்சனின் ஆள்காட்டி விரலில் பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் அடுத்த ஒரு மாதத்துக்கு கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

வாய்ப்பில்லை...

இது தொடர்பாக பி.சி.சி.ஐ.  வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சஞ்சு சாம்சனுக்கு அவரது வலது கை ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் வலைப்பயிற்சியை தொடங்குவதற்கு 5 அல்லது 6 வாரங்கள் ஆகலாம். அதனால், வருகிற பிப்ரவரி 8 ஆம் தேதி தொடங்கவுள்ள ரஞ்சி கோப்பை காலிறுதிப் போட்டியில் கேரள அணிக்காக சஞ்சு சாம்சன் விளையாட வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச தொடரில்...

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு, இந்திய அணி வெள்ளைப் பந்து போட்டிகளில் அடுத்த சில மாதங்களுக்கு விளையாடப் போவதில்லை. வருகிற ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி இருதரப்பு தொடரில் விளையாடவுள்ளது.  இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சரியாக விளையாடாத நிலையில், வங்கதேச தொடருக்கான இந்திய அணியில் சம்சு சாம்சன் இடம்பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து