முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அபிஷேக் புதிய மைல்கல்

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2025      விளையாட்டு
India 2023-11-24

Source: provided

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையில்  நடைபெற்றது. இதில்  முதலில் பேட்டிங் செய்த இந்தியா, அபிஷேக் சர்மாவின் அதிரடி சதத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 135 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 248 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து வெறும் 10.3 ஓவர்களில் 97 ரன்களுக்குள் சுருண்டது. இதனால் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.  

இந்த ஆட்டத்தில் இந்திய வீரரான அபிஷேக் சர்மா பவர்பிளே -ஆன முதல் 6 ஓவர்களில் மட்டும் தனி ஆளாக 21 பந்துகளில் 58 ரன்கள் அடித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் பவர்பிளேயில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.  இதற்கு முன்னர் ஜெய்ஸ்வால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 53 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை தகர்த்துள்ள அபிஷேக் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். 

________________________________________________________________________________________

துருவ் ஜுரெல் சிறந்த பீல்டர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 4 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. முன்னதாக ஒவ்வொரு தொடரிலும் பீல்டிங் துறையில் சிறந்து விளங்கும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ. சார்பில் 'இம்பேக்ட் பீல்டர்' விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் சிறந்த பீல்டராக துருவ் ஜுரெல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இந்த விருதை இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் வழங்கி கவுரவித்தார்.

________________________________________________________________________________________

டி20 அணியில் 4 இந்தியர்கள் 

2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நடந்தது. 16 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.  இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.

இந்நிலையில், ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகளை தேர்வு செய்து இந்த தொடரின் சிறந்த அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இந்த அணியில்  கொங்காடி திரிஷா, ஜி கமலினி, ஆயுஷி சுக்லா, வைஷ்ணவி சர்மா ஆகிய   4 இந்திய வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.  இந்த அணிக்கு தென் ஆப்பிரிக்காவின் கைலா ரெய்னெக் கேப்டனாகவும், இங்கிலாந்தின் கேட்டி ஜோன்ஸ் விக்கெட் கீப்பராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த அணியில் 12வது வீராங்கனையாக தென் ஆப்பிரிக்காவின் ந்தாபிசெங் நினி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

________________________________________________________________________________________

அபிஷேக் சர்மாவுக்கு பாராட்டு

அபிஷேக் சர்மா பந்துகளை எந்த ஒரு தவறுமின்றி தெளிவாக அடித்து விளையாடியதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் அவரை பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. இந்திய அணியின் வெற்றிக்கு அபிஷேக் சர்மாவைதான் பாராட்ட வேண்டும் என நினைக்கிறேன். அவர் எதிர்கொண்ட அனைத்துப் பந்துகளையும் எந்த ஒரு பிழையுமின்றி நேர்த்தியாக அடித்து விளையாடினார். அபிஷேக் சர்மா மிகவும் அற்புதமாக விளையாடினார் என்றார்.

இதே போல் அபிஷேக் சர்மாவுக்கு இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, அபிஷேக் ஷர்மா நன்றாக விளையாடினாய். இப்படிதான் உன்னை பார்க்க விரும்புகிறேன். உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து