முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடல்

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2025      தமிழகம்
Tasmac-Shop 2023 04 25

Source: provided

ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 182 மதுக் கடைகள் மூடப்பட்டன.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் தேர்தல் அன்று பாதுகாப்பு கருதி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் 3-ந் தேதி (அதாவது நேற்று முன்தினம்) முதல் 5-ந் தேதி வரையும் (அதாவது இன்று) 3 நாட்கள் மூட வேண்டும் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார்.

இதன் காரணமாக  3 நாட்களுக்கு முன்பே  மதுபிரியர்கள் தங்களுக்கு தேவையான மது வகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும்  கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் கலெக்டரின் உத்தரவின்பேரில், ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 182 டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இயங்கும் பார்கள், மதுபான உரிமதலங்கள் நேற்று காலை 10 மணி முதல் மூடப்பட்டன. அதனால் மது வாங்க வந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான வருகிற 8-ந்தேதியும் மது விற்பனை நடைபெறாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கும் நாட்களில் மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து