முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் புதினை விமர்சித்த ரஷ்யப் பாடகர் மர்ம மரணம்

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2025      உலகம்
Putin 2023 07-14

Source: provided

ஊரால்ஸ்:ரஷிய அதிபர் புதினை முட்டாள் என விமர்சித்த அந்நாட்டு பாடகரின் வீட்டில் காவல் துறையினர் நடத்திய சோதனையின் போது மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

ரஷியாவின் ஊரால்ஸ் மாவட்டத்தைச் சேர்ந்த போர் எதிர்பாளரும் பாடகருமான வடிம் ஸ்ட்ரோய்கின் என்பவர் உக்ரைன் நாட்டின் மீதான ரஷியாவின் படையெடுப்பை தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளார். மேலும், அவர் உக்ரைன் ராணுவத்தை ஆதரித்தது மற்றும் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்தது ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த பிப்.5 அன்று அந்நாட்டு காவல் துறையின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10வது தளத்திலுள்ள அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவரது விட்டின் சமையலறையின் ஜன்னல்களை திறக்கப்பட்டு மர்மமான முறையில் கீழே விழுந்தததில் அவர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, போர் எதிர்பாளரான வடிம் ரஷியாவின் படையெடுப்பை எதிர்த்து தொடர்ந்து பிரச்சாரங்கள் மேற்கொண்டதுடன், அதிபர் புதினை ‘முட்டாள்’ எனக் கூறியதுடன் அவரது செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளார்.

இதேப்போல், கடந்த 2024 நவம்பர் மாதம் அதிபர் புதினை விமர்சித்த ரஷிய நடனக் கலைஞரான விளாடிமிர் ஷ்க்ளியாரோவ் என்பவர் ஓர் கட்டடத்தின் 5-வது தளத்திலிருந்து மர்மமான முறையில் கீழே விழுந்து பலியானார். அவரது மரணத்தை விபத்தாக பதிவு செய்த அந்நாட்டு அதிகாரிகள் அதிகப்படியான வலி நிவாரணி மாத்திரைகளை அவர் சாப்பிட்டதினால் இந்த விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக குறிப்பிட்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து