முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டில்லியில் ஆம் ஆத்மி தோல்விக்கு காங்கிரஸ் காரணம்?

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2025      இந்தியா
delhi 2025-01-21

Source: provided

புது டில்லி: புது டில்லியில் ஆம் ஆத்மி தோல்விக்கு, அக்கட்சி காங்கிரசுடன் கூட்டணி வைக்காததே காரணம் என்று கூறப்படுகிறது.

டெல்லி சட்டமன்றத்துக்கு கடந்த 5-ம் தேதி நடந்த தேர்தலில்       பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 70 இடங்களில்  48 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியது. ஆம் ஆத்மி கட்சி  22 தொகுதிகளில் மட்டுமே வென்று ஆட்சியை இழந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா தோல்வியை தழுவினர். தற்போதைய முதல்வர் ஆதிஷி வெற்றி பெற்றார். 

 தலைநகர் டில்லியை ஆம் ஆத்மி இழந்ததற்குக் காரணம் காங்கிரஸ் என்றும் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மியும் ஒன்றாக இணைந்து போட்டியிட்டிருந்தால், தலைநகர் டில்லியில் வெற்றியை பதிவு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தக் கூட்டணிக்கு 49 சதவீத வாக்குகள் கிடைத்திருக்கும்.  காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்காததால், காங்கிரஸ் கட்சிக்கு என்ன நஷ்டம் என்று பிறகு கணக்கிட்டுக்கொள்ளலாம். ஆனால், ஆம் ஆத்மிக்கு ஒட்டுமொத்த தலைநகர் டில்லியுமே நஷ்டமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து