முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோர்ட்களில் அரசு சார்பில் வாதாட 39 புதிய வழக்கறிஞர்கள் நியமனம்

செவ்வாய்க்கிழமை, 11 பெப்ரவரி 2025      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை: சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோட்டு மதுரைக்கிளையில் அரசு சார்பில் வாதாட புதிதாக 39 வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோர்ட்டுகளில் அரசு தரப்பில் வாதாட கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்க கடந்தாண்டு டிசம்பர் 20- ம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டது.

அதில் எடுத்த முடிவுகளின் படி சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில், வேத பகத் சிங், புருசோத்தமன், செந்தில் முருகன், பரணிதரன், ஹர்ஷாராஜ் உள்ளிட்ட 8 வழக்கறிஞர்கள் சிறப்பு அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அஸ்வினி தேவி, சித்தார்த், சரவணன், இந்துபாலா உள்ளிட்ட 7 வழக்கறிஞர்கள் கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குற்றவியல் வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களாக பாஸ்கரன், உதயகுமார் உள்ளிட்ட 7 வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உமாகாந்த், கருணாநிதி, வெங்கட சேசய்யா உள்ளிட்ட 16 வழக்கறிஞர்கள், உரிமையியல் தொடர்பான வழக்குகளில் அரசு தரப்பில் வழக்கறிஞர்களாக ஆஜராவார்கள்.

வரி தொடர்பான வழக்குகளில் அரசு தரப்பில் அஜாராக வழக்கறிஞர் செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். மொத்தமாக சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் 39 புதிய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்கு வழக்குகளில் அரசு தரப்பிற்கு ஆஜராகி வாதாடுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து