முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயநாட்டில் யானை தாக்கி ஒருவர் பலி

செவ்வாய்க்கிழமை, 11 பெப்ரவரி 2025      இந்தியா
Elebent 2024-01-17

Source: provided

வயநாடு : கேரள வயநாட்டில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் கேரள-தமிழ்நாடு எல்லையில் உள்ள வனப்பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் மளிகை பொருட்கள் வாங்கும் கடையில் இருந்து நேற்றுமுன்தினம் மாலை திரும்பும் போது காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்ததாக உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரின் உடல் நேற்று காலை வன்ப்பகுதிக்கு அருகிலுள்ள ஒரு வயலில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மனு என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் இவர் தமிழ்நாட்டின் ஒரு பழங்குடி குக்கிராமத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் உயிரிழந்த நபர் காட்டு யானை தாக்கியதில்தான் உயிரிழந்தாரா?இல்லை வேறு ஏதேனும் காரணங்களால் உயிரிழந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து