முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 ரிக்டர் நில அதிர்வுக்கே டெல்லி குலுங்கியது ஏன்?

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2025      இந்தியா
Earthquack 2024-12-06

Source: provided

புதுடெல்லி: டெல்லியில் 4.0 ரிக்டருக்கே கட்டிடங்கள் பயங்கரமாகக் குலுங்கியது ஏன்? என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (பிப்.17) அதிகாலை 5.36 மணி அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. டெல்லியை மையமாகக் கொண்டு வட இந்தியா முழுவதும் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் உறுதியாகி உள்ளது.

நிலஅதிர்வின் தாக்கம் 4.0 ரிக்டர் என்றாலும் கூட கட்டிடங்கள் மிகப்பெரிய அளவில் குலுங்கியதால் டெல்லிவாசிகள் கடும் அச்சத்தில் உள்ளனர். ‘இது போல இதற்கு முன்பு உணர்ந்தது இல்லை. கட்டிடங்கள் பயங்கரமாகக் குலுங்கின’ என்று காசியாபாத் வாசி ஒருவர் ஊடகப் பேட்டியில் கூறியுள்ளார். இதுபோன்ற பாதிப்பினை ஏற்படுத்தும் நில அதிர்வுக்கு புவியியல் நிபுணர்கள் 'ஆழமற்ற நிலநடுக்கம்’  எனக் குறிப்பிடுகின்றனர். 

ஆழமற்ற நிலநடுக்கமானது  பூமியின் மேற்பரப்பை ஒட்டிய பகுதியில் மையம் கொண்டிருக்கும். அதாவது பூமிக்கு கீழ் 5 முதல் 10 கிலோ மீட்டர் ஆழத்திலேயே மையம் கொண்டிருக்கும். இதனாலேயே இவை வழக்கமாக அதிக ஆழத்தில் மையம் கொண்டிருக்கும் நிலநடுக்கத்தைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரதமர் மோடி அறிவுறுத்தல்: இதற்கிடையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் “டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. அனைவரும் அமைதியாக இருக்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்” எனக் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து