முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. மகா கும்பமேளாவில் ஒரே நாளில் 1.36 கோடி பேர் புனித நீராடல்

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2025      ஆன்மிகம்
Kumbh-Mela-2025-02-09

 பிரயாக்ராஜ், மகா கும்பமேளாவையொட்டி பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் நேற்று முன்தினம் (பிப். 17) ஒரே நாளில் 1.36 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளாவில், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.

மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடலில் பங்கேற்கும் பக்தர்கள் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டிவிட்டது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (பிப். 17) வரையிலான நிலவரப்படி, கும்ப மேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடலில் கலந்துகொண்டுள்ள பக்தர்கள் எண்ணிக்கை 54.31 கோடியைக் கடந்துள்ளது என்று உத்தரப் பிரதேச அரசின் தகவல் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் (இரவு 8 மணி நிலவரப்படி), 1.36 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து