முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயக்குனர் ஷங்கரின் சொத்து முடக்கத்துக்கு இடைக்கால தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2025      சினிமா
sanker

சென்னை, இயக்குனர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்து முடக்கத்துக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனராக வலம் வரும் ஷங்கரின் கடைசி 2 படங்களான கமல்ஹாசனின் 'இந்தியன் 2', ராம்சரணின் 'கேம் சேஞ்சர்' ஆகியவை வசூல் ரீதியில் தோல்வியை தழுவின. இந்த நிலையில், 'எந்திரன்' படத்தின் கதை காப்புரிமை தொடர்பாக ஷங்கர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கு நடந்து வரும் நிலையில், முதற்கட்டமாக ரூ.10.11 கோடி மதிப்பிலான அவரின் 3 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்தது.

 இதனிடையே, அமலாக்கத்துறை உத்தரவை எதிர்த்து இயக்குனர் ஷங்கர்  மேல்முறையீடு செய்தார்.  இந்த நிலையில், இயக்குனர் ஷங்கர் தொடுத்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர், இயக்குனர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும், விசாரணையை ஏப்ரல் 21-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதற்குள் அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து