முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுனிதாவில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் தாமதம்

வியாழக்கிழமை, 13 மார்ச் 2025      உலகம்
Sunita-Williams 2024-05-02

Source: provided

அமெரிக்கா: விண்வெளியில் உள்ள சுனிதாவில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில்  மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் போயிங் உருவாக்கிய ஸ்டாா்லைனா் விண்கலம், இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோருடன் சா்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி அடைந்தது. ஒன்பது நாள்களுக்குப் பிறகு ஸ்டாா்லைனா் மூலமே அவா்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவதாக இருந்தது. ஆனால், ஸ்டாா்லைனரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணாக அவா்களால் திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியவில்லை.

இதன் காரணமாக, அவர்கள் இருவரும் கடந்த 9 மாதங்களாக பூமிக்கு அப்பால் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சா்வதேச விண்வெளி நிலையத்தில் பாதுகாப்பாக தங்கியிருந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், அவர்கள் இருவரையும் அழைத்து வருவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய டிராகன் விண்கலம் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த விண்கலத்தில் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சுனிதா மற்றும் பட்ச்சுக்கு மாற்றுவீரர்களாக அனுப்பப்படவிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ஹைட்ராலிக் அமைப்பில் விஞ்ஞானிகள் கோளாறு இருப்பதை கண்டுபிடித்ததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விண்ணில் ஏவப்படுவதற்கான புதிய தேதி அறிவிக்கப் படவில்லை, இருப்பினும், மீண்டும் விண்ணில் ஏவுவதற்கான முயற்சி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து