முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலிடெக்னிக் கல்லூரி தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு : அமைச்சர் கோவி.செழியன் தகவல்

சனிக்கிழமை, 15 மார்ச் 2025      தமிழகம்
Kovi-Chezhian 2024-11-09

Source: provided

 சென்னை : பாலிடெக்னிக் கல்லூரி இறுதி ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு நிலுவைப் பாடங்கள் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பாலிடெக்னிக் கல்லூரி பயின்று பல்வேறு குடும்பச் சூழ்நிலைகளால் தேர்ச்சி பெறாமல் நிலுவை வைத்துள்ள பாடங்களுக்கு தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு வழங்கும்படி மாணவர்களிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசீலித்து உத்தரவிட்டதன்படி, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இறுதி ஆண்டு முடித்தும் பல்வேறு காரணங்களால் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் தங்களின் வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்ல இயலாத சூழ்நிலையினை கருத்தில் கொண்டு அவர்களும் வாழ்வில் முன்னேற்றம் பெற ஏதுவாக அரசு எதிர்வரும் ஏப்ரல் 2025 மற்றும் அக்டோபர் 2025 பருவத் தேர்வுகளின்போது, நிலுவைப் பாடங்கள் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு வழங்க முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்த விவரங்களை https://dte.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். இச்சிறப்பு வாய்ப்பினை சில பாடங்களில் தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் மாணவர்கள் பயன்படுத்தி  கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து