முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெல்மெட் அணியாமல் பயணம்: லாலு பிரசாத் மகனுக்கு அபராதம்

ஞாயிற்றுக்கிழமை, 16 மார்ச் 2025      இந்தியா
Lallu 2023-10-04

Source: provided

பாட்னா : லாலு பிரசாத் யாதவின் மகனுக்கு பீகார் போக்குவரத்து காவல்துறை ரூ.4,000 அபராதம் விதித்துள்ளது.

லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனும் முன்னாள் சுகாதார அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ் சனிக்கிழமை பாட்னாவில் உள்ள பீகார் முதல்வரின் இல்லத்திற்கு வெளியே ஹோலி கொண்டாடினார். அப்போது இருசக்கர வாகனத்திலும் அவர் பயணம் மேற்கொண்டார்.

இதுதொடர்பான விடியா இணையதளங்களில் வைரானது.

இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் பயணம் மேற்கொண்டதாக தேஜ் பிரதாப் யாதவ் மீது புகார் எழுந்தது. இந்த நிலையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்ததாக அவருக்கு எதிராக பீகார் போக்குவரத்து காவல்துறை ரூ.4,000 அபராதம் விதித்துள்ளது.

மேலும் அவர் பயணித்த இருசக்கரவாகனத்தின் காப்பீடு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழும் காலாவதியாகியிருந்தது என்று போக்குவரத்து காவல்துறை அதிகாரி பிரஜேஷ் குமார் சௌகான் தெரிவித்துள்ளார். இதனிடையே தேஜ் பிரதாப் யாதவின் மெய்க்காப்பாளர் பணியில் இருந்து காவலர் தீபக் குமார் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டார்.

எம்.எல்.ஏ. தேஜ் பிரதாப் யாதவின் அறிவுறுத்தலின் பேரில் அவர் பொதுஇடத்தில் நடனமாடியதாகக் கூறப்படும் பிடியோ இணையதளங்களில் வைரலானதை அடுத்து பீகார் காவல்துறை அவர் மீது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து