முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிந்து கிடக்கும் சக்திகள் ஈகோவை தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 16 மார்ச் 2025      தமிழகம்
OPS 2024-11-17

Source: provided

திருப்பத்தூர் : வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய பிரிந்து கிடக்கும் சக்திகள் ஈகோவை தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

வாணியம்பாடியை அடுத்த மேட்டுப்பாளையத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “அ.தி.மு.க.  எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, எதிர்காலத்திலும் சிறப்பாக செயல்படுவதற்கு சட்டங்கள் உருவாக்கப்பட்டது. ஜெயலலிதாவும் அந்த சட்ட விதிகளைத்தான் கடைபிடித்தார். இப்படியான வரலாற்றைக்கொண்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், இன்று பல பிரிவுகளாக பிளவுபட்டு நிற்கிறது.

பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைத்து கட்சி உருவாக்கப்பட்ட நோக்கத்தினை நிறைவேற்ற பாடுபாட வேண்டும். வரும் 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் அமைவதற்கு, அ.தி.மு.க. வின் பிரிந்த சக்திகள் ஒன்றிணைய வேண்டும்.

அ.தி.மு.க.  தலைவர்கள் தங்களின் ஈகோவை தவிர்த்து ஒன்றிணைந்து செயல்பட்டு தலைவர்கள் காட்டிய வழியில் செல்ல வேண்டும். தலைவர்கள் கட்சி நலனுக்காக செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் விரும்பம்.” என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து