முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபையில் செங்கோட்டையன் பேச வாய்ப்பு கேட்ட இ .பி.எஸ்.

செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2025      தமிழகம்
Eps 2024-12-03

Source: provided

சென்னை: செங்கோட்டையனை பேச அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கேட்டார்.

தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் அ.தி.மு.க. உறுப்பினர் செல்லூர் ராஜு நேற்று பல்வேறு கேள்விகளை எழுப்பி தொழில்துறை, பள்ளிக் கல்வித்துறை, நிதித்துறை அமைச்சர்களிடம் பதில் பெற்றார்.

முன்னதாக பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில்  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எழுப்பிய அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பதிலளித்தனர். இதனிடையே முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சரான செங்கோட்டையனிடம் பதிலளிக்குமாறு அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூற, அவர் அமைதியாகவே இருந்தார். முன்னதாக செங்கோட்டையன் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 2017 முதல் 2021 வரை பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார்.

அப்போது எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமியிடம் செங்கோட்டையன் இதற்கு பதிலளிப்பார் என்று கூறினார். உடனே எடப்பாடி பழனிசாமி, சபாநாயகரிடம் செங்கோட்டையன் பேச அனுமதிக்க வேண்டும் என்று சைகை மொழியில் கேட்டார். ஆனால் நேரம் இல்லை என்றும், எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் நீங்கள் வேண்டுமென்றால் பேசலாம் என்றும் சபாநாயகர் கூறினார்.

செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மன வருத்தம் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் முதல் அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்றுசெங்கோட்டையன் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளார். சட்டசபையில் செங்கோட்டையன் பேச அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தது அவர்கள் இருவருக்குள்ளும் சமாதானம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து