முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுங்க சாவடியை மூடும் பேச்சுக்கே இடமில்லை: நிதின் கட்காரி உறுதி

செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2025      இந்தியா
Nitin-Gadkari 2023 05 17

Source: provided

புதுடெல்லி: சுங்க சாவடியை மூடுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை என மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

இந்நிலையில் மாநிலங்களவையில் இதுகுறித்து பேசிய தி.மு.க.  எம்.பி. வில்சன், "சாலையை அமைக்க முதலீடு செய்தவர்கள் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடிகள் மூலம் அதற்கான தொகையை வசூலிக்கின்றனர். முதலீடு தொகை முழுவதுமாக வந்த பிறகு சுங்கச்சாவடிகள் அகற்றப்படுமா? இதற்கு ஏதாவது தணிக்கை நடைமுறை இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி, "முன்பு டோல் என்று அழைக்கப்பட்ட கட்டணம் தற்போது பயன்பாட்டு கட்டணம் என்று மாற்றப்பட்டிருக்கிறது. இது நிரந்தரமான நடவடிக்கை. தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளின் அடிப்படையில்தான் இதில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒருவேளை சாலை அமைக்க செய்யப்பட்ட முதலீடு மீண்டும் கிடைத்துவிட்டால் சுங்கச்சாவடிகளை மூடுவது தொடர்பாக எந்த யோசனையும் இல்லை.

தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் - 2008ன்படி, ஒரு சாலை தனியார் உதவியுடன் அமைக்கப்படுகிறது எனில், அதற்கான கட்டணத்தை ஒப்பந்த காலம் முடியும் வரை வசூலிக்கலாம். ஒப்பந்தம் முடிந்த பின்னர் அரசு நேரடியாகவோ, அரசு கை காட்டும் அமைப்போ கட்டண வசூலில் ஈடுபடும். இந்த கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் திருத்தி அமைக்கப்படும். இதனால் சுங்க சாவடியை மூடுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து