முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 22-ம் தேதி மணிப்பூர் பயணம் : பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க திட்டம்

புதன்கிழமை, 19 மார்ச் 2025      இந்தியா
Joymalya 2025-03-17

Source: provided

புதுடெல்லி : மணிப்பூரில் கலவரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 22-ம் தேதி பயணம் மேற்கொள்கின்றனர். அப்போது கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக கலவரத்தின் பிடியில் சிக்கியுள்ளது. மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையேயான இந்த கலவரத்தில் இதுவரை 250-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

மேலும் வன்முறை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகளை விட்டுவிட்டு பல மாதங்களாக நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனிடையே மணிப்பூர் முதல்-மந்திரியாக இருந்து வந்த பைரேன் சிங் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் பி.ஆர்.கவாய் உள்பட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 6 பேர் வருகிற 22-ம் தேதி மணிப்பூர் செல்ல இருப்பதாக தேசிய சட்ட சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

"மணிப்பூர் ஐகோர்ட்டின் 20-ம் ஆண்டு விழாவையொட்டி சுப்ரீம் கோர்ட் நீதிபதியும், தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவருமான பி.ஆர்.கவாய், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோருடன் வருகிற 22-ம் தேதி மணிப்பூருக்கு செல்கிறார். இந்த பயணத்தின்போது நீதிபதிகள் 6 பேரும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சமடைந்துள்ள நிவாரண முகாம்களுக்கு செல்வார்கள்.

நீதிபதிகளின் இந்த வருகை பாதிக்கப்பட்ட மக்களுக்கான சட்ட மற்றும் மனிதாபிமான உதவியின் தற்போதைய தேவையை வலியுறுத்தும். இந்த பயணத்தின்போது இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மற்றும் உக்ருல் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள புதிய சட்ட உதவி மையங்களையும், மாநிலம் முழுவதும் உள்ள சட்ட சேவை முகாம்கள் மற்றும் மருத்துவ முகாம்களையும் நீதிபதி கவாய் தொடங்கி வைப்பார். தொடரும் வன்முறைகளுக்கு மத்தியில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவி மற்றும் ஆதரவை வழங்குவதில் மணிப்பூர் மாநில சட்ட சேவைகள் ஆணையத்துடன் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து