முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரிடர் பட்டியலில் வெயில் தாக்கத்தை சேர்க்க வேண்டும் மத்திய அரசுக்கு பாராளுமன்றக்குழு பரிந்துரை

வியாழக்கிழமை, 20 மார்ச் 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி: மத்திய அரசு தனது பேரிடர் மேலாண்மைத் திட்டங்களில் வெப்ப அலைகள் போன்ற "புதிய மற்றும் வளர்ந்து வரும்" பேரிடர்களைச் சேர்க்க வேண்டும் என்று பாராளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.

முன்னதாக உள்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு கடந்த வாரம் மாநிலங்களவையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில் வெயில் தாக்கத்தை பேரிடர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. அதன்படி, 'அரசின் புதிய மற்றும் அதிகரித்து வரும் பேரிடர் மேலாண்மை திட்டத்தில் வெப்ப அலையின் தாக்கம் உள்ளிட்டவற்றை சேர்க்க இந்த குழு பரிந்துரைக்கிறது. மேலும், பேரிடர் மேலாண்மை சட்டம் பொருத்தமானதாகவும், வளர்ந்து வரும் பேரிடர் அபாயங்களுக்கு ஏற்பவும் இருப்பதை உறுதிசெய்ய, வல்லுனர்கள் மற்றும் அனைத்து தரப்பினருடன் கலந்தாலோசித்து, பேரிடர் பட்டியலை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து புதுப்பிப்பதற்கான வழிமுறையையும் நிறுவ வேண்டும்' என கூறப்பட்டு உள்ளது.

சேதங்களை குறைக்கவும், விரைவாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட பேரிடர் எதிர்ப்பு உள்கட்டமைப்புகள் மற்றும் போக்குவரத்து அமைப்புகளில் அதிக முதலீடு செய்யவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. பா.ஜகவின் ராஜ்யசபா எம்.பி. ராதா மோகன் தாஸ் அகர்வால் தலைமையிலான 31 பேர் கொண்ட குழு, காலநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் பேரிடர் அதிர்வெண் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நீண்டகால பேரிடர் தயார்நிலை குறித்து ஆய்வு செய்து திட்டமிடுமாறு மத்திய அமைச்சகத்தை வலியுறுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து