முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.எஸ்.கே. அணியில் சகோதர வீரர்கள்? - புகைப்படம் இணையத்தில் வைரல்

சனிக்கிழமை, 22 மார்ச் 2025      விளையாட்டு
CSK-1 2025-03-22

Source: provided

சென்னை : இரண்டு சி.எஸ்.கே. வீரர்கள் சகோதரர்கள் போலிருக்கிறார்கள் என்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐ.பி.எல். போட்டிகள்...

ஐ.பி.எல். போட்டிகள் நேற்று முதல் (மார்ச்.22) தொடங்கின. சி.எஸ்.கே. அணிக்கு இன்று இரவு மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தனது முதல் போட்டியில் சேப்பாகில் விளையாட இருக்கிறது. கடந்த சீசனில் தோனி கேப்டன் பொறுப்பை துறக்க, ருதுராஜ் கெய்க்வாட் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த சீசனில் சி.எஸ்.கே. அணி பிளே-ஆஃப் செல்லாமலே வெளியேறியது.

சகோதரர்கள்...

சி.எஸ்.கே. அணியில் நியூசிலாந்தைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திராவும் தமிழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரே சித்தார்த்தும் பார்ப்பதற்கு சகோதரர்கள் மாதிரியே இருக்கிறார்கள். சமீபத்தில் எடுத்த இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரச்சின் கண்ணாடி அணிந்தால் ஆண்ட்ரே சித்தார்த் மாதிரியே இருக்கும் எனவும் ரச்சினுக்கு எதாவதென்றால் சித்தார்த்தை களத்தில் இறக்கலாம் என்றும் சமூக ஊடகங்களில் ஜாலியாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்தப் படத்துக்கு உடன்பிறவா சகோதரர்கள் என சி.எஸ்.கே. ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து