எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் நேற்று தொடங்கியது. கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடர் 18-வது ஆண்டாக வீறுநடை போடுகிறது. இந்த நிலையில் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நேற்று (சனிக்கிழமை) தொடங்கி மே 25-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. முன்னதாக, கொல்கத்தா அணி வீரர்களை நேரில் சந்தித்து நடிகரும் , கொல்கத்தா அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்தார் . இது தொடர்பான விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .
______________________________________________________________________________________________________
பாகிஸ்தான் உலக சாதனை
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று முன்தினம்நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 19.5 ஓவர்களில் 204 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இதனையடுத்து 205 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 16 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 207 ரன் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெறும் 16 ஓவர்களில் 205 ரன்களை சேசிங் செய்து அசத்தியது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 200+ ரன்களை அதிவேகமாக சேசிங் செய்த அணி என்ற மாபெரும் உலக சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. இதற்கும் முன்னர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி 17.4 ஓவர்களில் 206 ரன்களை சேசிங் செய்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள பாகிஸ்தான் புதிய உலக சாதனை படைத்துள்ளது.
______________________________________________________________________________________________________
அர்ஜென்டினாவிடம் உருகுவே தோல்வி
2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் தென்அமெரிக்க அணிகளுக்கான தகுதி சுற்றில் இந்திய நேரப்படி இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா - உருகுவே அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய அர்ஜென்டினா ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அர்ஜென்டினா அணியில் தியாகோ அல்மடா கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். இந்த பிரிவில் அர்ஜென்டினா அணி இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 3 தோல்வியுடன் 28 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
______________________________________________________________________________________________________
சென்னை போட்டி குறித்து ஹர்பஜன்
ஐ.பி.எல். 2025 டி20 கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது. இன்று ஞாயிற்றுக்கிழமை 2 போட்டிகள் நடைபெறுகின்றன. இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்காக இரண்டு அணிகளும் தயாராகி வருகின்றன. நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சென்னை - மும்பை போட்டியானது ஐ.பி.எல்.-இல் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை போன்றது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹர்பஜன் சிங், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல்.-இல் சிறந்த அணிகளில் ஒன்றாகும். சென்னை அணியை தோற்கடிக்கும் அணி தலைப்புச் செய்திகளில் இடம்பெறும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் அது பொருந்தும். ஒவ்வொரு ஐ.பி.எல். சீசனிலும் பல இளம் வீரர்கள் வருகிறார்கள். ரன்கள் அடிக்கிறார்கள், விக்கெட்டுகளை எடுக்கிறார்கள். ஆனால் என்னுடைய பார்வை எல்லாம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ரியான் பராக் மேல் தான் உள்ளது. அவரிடம் அற்புதமான திறமை உள்ளது" என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
யுவராஜ் சிங் மீண்டும் கேப்டன்
04 Jul 2025ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் தொடர் வரும் 18-ம் தேதி தொடங்க உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-07-2025.
05 Jul 2025 -
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்தை பொதுமக்கள் இன்று பார்க்கலாம்
05 Jul 2025சென்னை : சர்வதேச விண்வெளி மையத்தை இன்று இரவு 8 மணிக்கு முதல் 8.06 மணி வரை சென்னை, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் பார்க்கலாம
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
கும்பாபிஷேக விழா: திருச்செந்தூரில் எஸ்.பி. ஆய்வு
05 Jul 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆய்வு நடத்தினார்.
-
வா.மு.சேதுராமன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
05 Jul 2025சென்னை, பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
20 ஆண்டு கால மோதல் முடிவுக்கு வந்தது: ஒரே மேடையில் உத்தவ் - ராஜ்தாக்கரே
05 Jul 2025மும்பை, மும்பை ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் உத்தவ் - ராஜ்தாக்கரே பங்கேற்றனர்.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
மராத்தி பேசாவிட்டால் காதுகளுக்கு கீழே அடியுங்கள்: ராஜ் தாக்கரே
05 Jul 2025மும்பை : மகாராஷ்டிராவில் மராத்தி பேசாவிட்டால் காதுக்குக் கீழே அடியுங்கள் என்ற ராஜ் தாக்கரே பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சுற்றுப்பயணத்திற்கான கட்சிப் பாடல், லோகோவை வெளியிட்டார் இ.பி.எஸ்.
05 Jul 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்துக்கான பாடல் மற்றும் லோகோ அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டது.