முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை: நீதிபதி யஷ்வந்த் வர்மா விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2025      இந்தியா
Yashwant-Verma 2025-03-22

Source: provided

புதுடெல்லி : தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக கூறப்படுவதை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா  கடுமையாக மறுத்துள்ளார்.

இதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்தியாய்க்கு, நீதிபதி வர்மா எழுதி இருக்கும் பதில் கடிதத்தில், அந்த பணம் குறித்து எனக்கோ எனது குடும்பத்தாருக்கோ எதுவும் தெரியாது. அந்தப் பணத்துடன் எங்களுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை.  பொருள்கள் பாதுகாப்பு அறையில் நானோ எனது குடும்பத்தினரோ எந்த பணத்தையும் வைக்கவில்லை என்று நான் உறுதியாக கூறுகிறேன். அங்கிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பணத்துக்கும் எங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. நானோ எனது குடும்பத்தினரோ பணத்தை அங்கு பதுக்கி வைத்திருந்தோம் எனக்கூறுவது முற்றிலும் அபத்தமானது. என் மீது அவதூறுக் குற்றச்சாட்டினை சுமத்துவதற்கு முன்பு ஊடகங்கள் குறைந்தபட்சம் அதுகுறித்து என்னிடம் விசாரித்திருக்க வேண்டும்" இவ்வாறு நீதிபதி வர்மா தெரிவித்துள்ளார்.

முன்னதாக மார்ச் 14ம் தேதி ஹோலி அன்று இரவு 11.45 மணிக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த வர்மா வீட்டில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. அதுகுறித்து தகவல் அறிந்து தீயை அணைப்பதற்காக வந்த தீயணைப்புத் துறையினர் அங்கிருந்து கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணத்தை எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து