முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீல்சேரில் இருந்தாலும் சி.எஸ்.கே. அணிக்காக தொடர்ந்து ஆடுவேன் ஓய்வு குறித்து எம்.எஸ்.டோனி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2025      விளையாட்டு
Dhoni 2023 04 29

Source: provided

சென்னை: வீல்சேரில் இருந்தாலும் சி.எஸ்.கே. அணியில் தொடர்ந்து ஆடுவேன் என்று ஓய்வு குறித்து எம்.எஸ்.டோனி தெரிவித்துள்ளார்.

முதல் போட்டி...

பத்து அணிகள் பங்கேற்கும் 18வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 

அன்கேப்டு வீரர்...

இந்த நிலையில், நேற்று இரவு 7.30 மணிக்கு சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் 3-வது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.  இந்த சீசனில் எம்.எஸ். டோனி அன்கேப்டு வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வகையில் டோனி எந்த வரிசையில் ஆடுவார் என்பது ரசிகர்களின் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

என்னுடைய உரிமை...

இந்நிலையில் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்திடம் பேசிய எம்.எஸ். டோனி, "சென்னை அணிக்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் என்னால் விளையாட முடியும். அது என்னுடைய அணி உரிமை. நான் காயமடைந்து சக்கர நாற்காலியில் இருந்தாலும், என்னை சி.எஸ்.கே. அணிக்காக விளையாட இழுத்துச் செல்வார்கள்" என்று கிண்டலாக தெரிவித்தார். 43 வயதான டோனி, 2025 ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் மிக வயதான வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து