முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். தொடக்க போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு

ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2025      விளையாட்டு
23-Ram-55

Source: provided

கொல்கத்தா: கோலி, சால்ட் அசத்தல் அரைசதத்தால் ஐ.பி.எல். தொடரை பெங்களூரு அணி வெற்றியுடன் தொடங்கியது.

ஐ.பி.எல். தொடர்... 

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் நேற்று முன்தினம் (மார்ச் 22) கோலாகலமாகத் தொடங்கியது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் விளையாடியது. 

ரஹானே அதிரடி...

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். டி காக் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின், சுனில் நரைனுடன் கேப்டன் அஜிங்க்யா ரஹானே ஜோடி சேர்ந்தார். இந்த இணை சிறப்பாக விளையாடியது. ரஹானே அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். மறுமுனையில் சுனில் நரைன் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுனில் நரைன் 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஜிங்க்யா ரஹானே அரைசதம் கடந்து  அசத்தினார். அவர் 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பின், களமிறங்கியவர்களில் அங்கிரிஷ் ரகுவன்ஷியை தவிர மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. ரகுவன்ஷி 22 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

174 ரன்கள்... 

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது. ஆர்சிபி தரப்பில் க்ருணால் பாண்டியா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரைத் தொடர்ந்து, ஜோஸ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும், யஷ் தயாள், ராஷிக் தார் சலெம் மற்றும் சுயாஷ் சர்மா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

கோலி, சால்ட் அசத்தல்...

175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி, பில் சால்ட் இருவரும் முதல் பந்திலேயே பவுண்டரியுடன் ரன் வேட்டையைத் தொடங்கினர். பெங்களூரு அணி பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் 80 ரன்கள் குவித்து அசத்தியது. முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்த நிலையில், பில் சால்ட் 56 ரன்களில்(9 பவுண்டரி, 2 சிக்ஸர்) விக்கெட்டை கொடுத்து பெவிலியன் திரும்பினார். 

ஆர்.சி.பி. வெற்றி...

அவருக்குப் பின்னர் வந்த படிக்கல் சரியாக சோபிக்கவில்லை. அவர் 10 ரன்களில் வீழ்ந்தார். அவருக்குப் பின்னர் வந்த ரஜத் படிதார் அதிரடியாக விளையாடி 34 ரன்களு குவித்து வெளியேறினார். முடிவில், வந்த லிவிங்ஸ்டன் பவுண்டரி விளாசி ஆட்டத்தை முடித்துவைத்தார். 56-வது அரைசதத்தை கடந்த விராட் கோலி 59 ரன்களுடனும் (4 பவுண்டரி, 3 சிக்ஸர்), லிவிங்ஸ்டன் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து