முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சஞ்சு சாம்சன் புதிய சாதனை

திங்கட்கிழமை, 24 மார்ச் 2025      விளையாட்டு
Sanju-Samson

Source: provided

மும்பை : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

242 ரன்கள் எடுத்தது...

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் (மார்ச் 23) நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 44 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது. அந்தப் போட்டியில் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்கள் எடுத்தது.

4,000 ரன்கள் குவிப்பு...

அந்த அணியில் துருவ் ஜுரெல் அதிகபட்சமாக 70 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் 66 ரன்கள் எடுத்தார். 66 ரன்கள் எடுத்ததன் மூலம், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 4,000 ரன்கள் குவித்து சஞ்சு சாம்சன் சாதனை படைத்துள்ளார். இதுவரை 168 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 4,485 ரன்கள் குவித்துள்ளார். அதில் 26 அரைசதங்கள் மற்றும் 3 சதங்கள் அடங்கும். ஐபிஎல் தொடரில் அவரது தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் 119 என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து