முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைன் விளம்பரங்களுக்கான டிஜிட்டல் சேவை வரி ரத்தாகிறது

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : ஆன்லைன் விளம்பரங்களுக்கான டிஜிட்டல் சேவை வரியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது

வௌிநாட்டு இணையதளங்கள் இந்தியாவில் மேற்கொள்ளும் வர்த்தகம் மற்றும் சேவைகள் மூலம் பெறும் வருமானத்துக்கு மத்திய அரசு டிஜிட்டல் சேவை வரியை விதித்துள்ளது. அதன்படி கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் ஆன்லைன் விளம்பர சேவைகளுக்கு 2 சதவீத சமன்பாட்டு வரி விதிக்கப்பட்டது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து வெளிநாட்டு நிறுவனங்கள் செய்யும் மின் வணிக பரிவர்த்தனைகள் மீது விதிக்கப்பட்ட 2 சதவீத சமன்பாட்டு வரியை மத்திய அரசு நீக்கியது. ஆனால், ஆன்லைன் விளம்பரங்களுக்கு விதிக்கப்பட்ட 6 சதவீத டிஜிட்டல் வரி தொடர்ந்து நீடிக்கிறது.

இந்த நிலையில் ஆன்லைன் விளம்பரங்களுக்கான சமநிலை வரியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முன்மொழிவை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார். 2025-26ம் நிதியாண்டுக்கான நிதி மசோதாவில் செய்யப்பட்டுள்ள 59 திருத்தங்களின் ஒருபகுதியாக இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து