முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் காலியாக உள்ள 448 உறுப்பினர் பதவிகளுக்கு வருகிற மே மாதம் உள்ளாட்சி தேர்தல் : மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2025      தமிழகம்
Election 2024-04-08

Source: provided

சென்னை : தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 448 உறுப்பினர் பதவிகளுக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆயத்த நடவடிக்கை....

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தற்செயல் மற்றும் இடைக்கால தேர்தல்களை நடத்த ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 4 வார்டு கவுன்சிலர்களுக்கான காலிப்பதவியிடங்கள் உட்பட 35 மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 133 காலிப்பதவியிடங்கள் ஏற்பட்டுள்ளன.

முன்னேற்பாடு பணிகள்...

மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளில் 315 காலிப்பதவியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இப்பதவியிடங்களுக்கு வரும் மே மாதம் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை விரைவாக முடிக்க தொடர்புள்ள அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து