Idhayam Matrimony

ஹைதராபாத் - லக்னோ போட்டியில் தமனின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2025      விளையாட்டு
Hyderabad 2024-05-25

Source: provided

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கு முன்னதாக தமனின் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். 18-ஆவது சீசன் கடந்த சனிக்கிழமை கொல்கத்தாவில் கோலாகலமாக தொடங்கியது. இரண்டாவது போட்டியில், ஹைதராபாத் அணியை ராஜஸ்தான் அணி எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், வருகின்ற நாளை மார்ச் 27 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டிக்கு முன்னதாக திடலில் மாலை 6.30 மணியளவில் இசையமைப்பாளர் தமனின் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமன், “ஒஜி, குண்டூர் காரம், டாக்கு, கேம் சேஞ்சர் உள்ளிட்ட படத்தின் பாடல்கள் நமது மைதானத்தில் முதல்முறையாக பாடவுள்ளேன். நிதீஷ் ரெட்டியும் என்னுடன் பாடுவார் என்று நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே. - மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கு முன்னதாக இசையமைப்பாளர் அனிருத் நிகழ்ச்சி நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து