முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலங்கானாவில் அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விபத்து 6 பேர் பலி

புதன்கிழமை, 26 மார்ச் 2025      இந்தியா
Telangana-Map

தெலங்கானாவில் அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விலுந்ததில்  6 பேர்  உயிரிழந்துள்ளனர்.

தெலங்கானாவில் 6 மாடிக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் காயமடைந்துள்ளனர். பத்ராத்ரி கொத்தகுடம் மாவட்டத்தில் உள்ள பத்ராசலம் நகரில் ஆறு மாடிக் கட்டடம் கட்டப்பட்டு வருகின்றது. இந்தக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 

முதல்கட்டமாக 6 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும், இடிபாடிகளை அகற்ற புல்டோசர்கள் மற்றும் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி, உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து