முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவரன் ரூ.67,000-ஐ நெருங்கியது: தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்

சனிக்கிழமை, 29 மார்ச் 2025      வர்த்தகம்
gold 2023 01 26

சென்னை, சவரன் ரூ.67,000-ஐ நெருங்கி தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம் தொட்டுள்ளது.

பங்குச்சந்தை வீழ்ச்சி மற்றும் போர் சூழல்களால், தங்கத்தை பலரும் பாதுகாப்பான முதலீடாக கருதி அதில் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் தேவை அதிகரித்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 20-ந்தேதி தங்கம் விலை இதுவரை இல்லாத உச்சமாக ரூ.66,480 என்ற நிலையை அடைந்தது. அதன் பின்னர், கடந்த 21-ந்தேதியில் இருந்து குறைந்து வந்த தங்கம் விலை, மீண்டும் அதிகரித்தது. 

இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் அதன் விலை உயர்ந்து காணப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 235-க்கும், ஒரு பவுன் ரூ.65 ஆயிரத்து 880-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.105-ம், பவுனுக்கு ரூ.840-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 340-க்கும், ஒரு பவுன் ரூ.66 ஆயிரத்து 720-க்கும் விற்பனையானது. 

இந்நிலையில் நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,880-க்கு விற்பனையாகி புதிய உச்சம் தொட்டுள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,360-க்கு விற்பனையானது. தங்கம் விலை இதன் மூலம் மீண்டும் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து காணப்படுவதால், தங்கம் விலை மீண்டும் எகிறியுள்ளது. வெள்ளி ஒரு கிராம் ரூ.113-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து