முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொள்ளையடித்தவர்களை பிரதமர் விடமாட்டார்: சோக்ஸி கைது குறித்து மத்திய அமைச்சர்

திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2025      இந்தியா
Mehul-Choksi 2024-04-14

Source: provided

புதுடெல்லி : ஏழைகளிடமிருந்து பணத்தை கொள்ளையடித்தவர்களை பிரதமர் மோடி விட்டுவிடமாட்டார் என நிதி மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்ஸி கைது குறித்து மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

2021-ம் ஆண்டில், பிரதமர் மோடி, மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சிவிசி) மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) ஆகியவற்றின் கூட்டு மாநாட்டில் உரையாற்றினார். அப்போது ஏழைகளை ஏமாற்றுபவர்கள் உலகில் எங்கிருந்தாலும், அவர்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்" எனக் கூறியிருந்தார். இதனிடையே, பிரதமர் மோடி மக்களுக்கு அளித்த வாக்குறுதியை மேற்கோள் காட்டி, “மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியதாவது, ஏழைகளிடமிருந்து பணத்தை கொள்ளையடித்தவர்களை பிரதமர் மோடி விட்டுவிடமாட்டார். நாட்டில் ஏராளமானோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது மெகுல் சோக்ஸி கைது செய்யப்பட்டுள்ளார். இது மிகப் பெரிய சாதனை. என்றார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூ.13,500 கோடி நிதி மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்ஸி, பெல்ஜியத்தில் அந்த நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் நாடு கடத்தல் தொடர்பான கோரிக்கையை ஏற்று கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை ஒரு வாரத்துக்கு பிறகு நடைபெற உள்ளது. இடைப்பட்ட காலத்தில் அவர் சிறையில் இருப்பார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து