முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருத்தாசலம் பழைய பேருந்து நிலையத்தை மேம்படுத்த ரூ.90 லட்சம்: அமைச்சர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2025      தமிழகம்
KN-Nehru 2023 04 01

Source: provided

சென்னை : விருத்தாசலம் பழைய பேருந்து நிலையத்தை மேம்படுத்த ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் கே.என்.நேரு, விருத்தாசலத்தில் பழைய பேருந்து நிலையப் பணிகள் 2025-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், விருத்தாசலம் புறவழிச் சாலையில் பேருந்து நிலையம் அமைக்க அரசு ஆவன செய்யுமா என எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது: விருத்தாச்சலம் புறவழி சாலையில் பேருந்து நிலையம் அமைக்க வருவாய்த்துறை இடம் இருந்தால் அமைப்பதாகவும், அல்லது தனியாரிடமிருந்து நிலம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், விருத்தாசலம் பழைய பேருந்து நிலையம் புனரமைப்பு பணி ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் 2025-ம் ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து