முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் பரவும் காட்டுத்தீ: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2025      உலகம்
Fire

Source: provided

பெய்ஜிங் : சீனாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் வடக்குப் பகுதியில் ஹூகான் கவுன்டியில் உள்ள காடுகளில் கடந்த சனியன்று (ஏப். 12) காட்டுத் தீ ஏற்பட்டது. பலத்த காற்று காரணமாக இது சாங்ஷி மாகாண காடுகள் வரை பரவியுள்ளது. காட்டுத் தீயை அணைக்க 5 ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்தக் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 266 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். இதுவரை, உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பலத்த காற்று, சிக்கலான நிலப்பரப்பு, அடர்த்தியான தீ பரவுதல் ஆகிய காரணங்களால் காட்டுத் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து