Idhayam Matrimony

குட் பேட் அக்லி படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2025      சினிமா
ilayaraja

சென்னை, குட் பேட் அக்லி படக்குழுவிடன் இழப்பீடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு இப்படம் மிகுந்த திருப்தியளித்துள்ளதால் முதல் மூன்று நாள்களில் ரூ. 100 கோடி வசூலைக் கடந்துள்ளது.

இந்த நிலையில், குட் பேட் அக்லி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த 3 பாடல்களை அவரது அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக வழக்கறிஞர் மூலம் படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சள் குருவி மற்றும் இளமை இதோ இதோ ஆகிய பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக ரூ. 5 கோடி இழப்பீடு கேட்டுள்ளார். மேலும், மூன்று பாடல்களையும் படத்தில் திரையிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், 7 நாள்களுக்குள் நிபந்தையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் இளையராஜா தெரிவித்துள்ளார். இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து