முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நயினார் பா.ஜ.க. தேசியத் தலைவராகவே ஆகலாம்: தங்கம் தென்னரசு கிண்டல்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2025      தமிழகம்
Thangam 2023 04 05

Source: provided

சென்னை : பழமொழிப் புலவரான நயினார் பா.ஜ.க. தேசியத் தலைவராகவே ஆகலாம் என அமைச்சர்  தங்கம் தென்னரசு கிண்டலடித்துள்ளார்.

தேசிய கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை இந்தி திணிப்பு எனக்கூறி ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டுக்கான ரூ.2000 கோடி கல்வி நிதியை தர மறுத்து மத்திய அரசு கைவிரித்துவிட்டது. இந்நிலையில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக நேற்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் ருசிகர விவாதம் நடந்துள்ளது.

மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதில் புதிதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொறுப்பேற்றுள்ள நெல்லை எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் அவையில் பேசும்போது, முதலமைச்சர் கேரளாவுக்கு செல்லும்போது மலையாளத்தில் பேசினார் என தெரிவித்தார்.

மேலும் அவர் மலையாளத்தில் எப்படி பேசினார் என நயினார் நாகேந்திரன் அமொழியில் பேசிக்காட்டினார். தனது உரையின்போது பல்வேறு மொழிகளில் நயினார் நாகேந்திரன் பேசிக்காட்டினார். அப்போது எழுந்த அமைச்சர் தங்கம் தென்னரசு, பா.ஜ.க. மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் மாறியிருக்கக்கூடிய நிலையில் அவர் பல மொழி பேசுவதை பார்த்தால் பழமொழிப் புலவர் போல இருக்கிறார். எனவே அவர் தேசிய தலைவர் ஆவதற்கு பலமான அச்சாரம் போடுகிறாரோ என்னவோ என்று கேலியாக தெரிவித்தார்.

இதை கேட்டு அவையில் சிரிப்பலை எழுந்தது. இதைத்தொடர்ந்து மாநில சுயாட்சி தீர்மானத்தை பா.ஜ.க. ஏற்காது என கூறி அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து