முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீரன் சின்னமலையின் 270-வது பிறந்தநாள்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2025      தமிழகம்
EPS-Photo-2025-04-17

சென்னை, தீரன் சின்னமலையின் 270வது பிறந்தநாள் முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 270-ஆவது பிறந்த நாளான நேற்று சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை திருஉருவச் சிலைக்கு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில்,  கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

ஈரோடு மாவட்டத்தில்: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 270-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் ஆணைப்படி, ஈரோடு மாவட்டம், அரச்சலூர் ஓடாநிலையில் அமைந்திருக்கும் தீரன் சின்னமலையின் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கும், அங்கே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருஉருவப் படத்திற்கும், ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.ஏ. இராமலிங்கம், இராமலிங்கம், மாவட்டக் கழக அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் ராமசாமி, செல்வகுமார சின்னையன், மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் கிட்டுசாமி, மாவட்ட மகளிர் அணிச் செயலாளரும், மாநகராட்சி முன்னாள் மேயருமான மல்லிகா பரமசிவம், மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் மு. சதீஷ்குமார், மொடக்குறிச்சி தெற்கு ஒன்றியக் கழகச் சதீஷ்குமார் செயலாளர் கதிர்வேல், மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றியக் கழகச் கதிர்வேல், செயலாளர் குலவிளக்கு மு. செல்வராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து, செல்வராஜ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து